உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பணியாளரை தாக்கி கொலை மிரட்டல்: இரண்டு பேருக்கு காப்பு

அரசு பணியாளரை தாக்கி கொலை மிரட்டல்: இரண்டு பேருக்கு காப்பு

குளித்தலை: அரசு பணியாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.குளித்தலை, பெரியபாலத்தில் நீர்வளத்துறை கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணேசன், 56, என்பவர் ஆய்வாளராக பணிபுரிகிறார்.கடந்த 29ம் தேதி தண்ணீர்பள்ளி தென்கரை வாய்க்கால் கரையில் உள்ள, நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் நாக-ராஜன், 53, என்பவர் வீடு கட்டி வருவதை பார்த்த கணேசன், இங்கு வீடு கட்ட கூடாது என்று கூறியுள்ளார்.அப்போது நாகராஜன், அவரது உறவினர் ரவிச்சந்திரன், 57, ஆகியோர் கணேசனிடம் தகராறு செய்தனர். தொடர்ந்து கணேசன் வழக்கம் போல் களஆய்வு செய்துவிட்டு, நேற்று முன்தினம் காலை, அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை அலுவலக வளாகத்தில் வைத்து வழிம-றித்து, நாகராஜன், ரவிச்சந்திரன் உள்பட 5 பேர் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி கையால் அடித்தும், கொலை மிரட்டல் விடுத்தனர், பாதிக்கப்பட்ட கணேசன் குளித்தலை அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்றார். குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி நாகராஜன், ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி