உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒன்றிய செய்திகள் - கரூர்

ஒன்றிய செய்திகள் - கரூர்

சாயக்கழிவு நீர் கலப்பதைதடுக்க நடவடிக்கை தேவைகாவிரி ஆற்றில், சாயக்கழிவு நீர் கலப்பதால் கரூர் மாவட்ட மக்கள், விவசாயிகளின் அவதி தொடர்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வரும் நொய்யல் ஆறு, கரூர் மாவட்டம் நொய்யல் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இருப்பினும், திருப்பூர் பகுதிகளில் ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்து விடுகின்றனர்-. மழை பெய்யும் நிலையில், ஆற்றில் வரும் தண்ணீருடன் சாயக்கழிவை திறந்து விடுகின்றனர். இது காவிரி ஆற்றில் கலப்பதால், குடிநீர் மாசுப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீரை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாலையோரத்தில் குப்பைஅகற்ற வேண்டுகோள்சாலையோரத்தில் குவிந்துள்ள குப்பைகளை எடுக்க வேண்டும்.கரூர், வாங்கபாளையம் சாலையில் குப்பைத் தொட்டி வசதி இல்லாததால், சாலை ஓரத்தில் மலைபோல் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. பகுதிவாசிகள், குறிப்பிட்ட இடத்தில் குப்பையை கொட்டாமல், சாலை ஓரத்தில் குப்பையை வீசி செல்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் பஞ்., நிர்வாகம் எடுக்கவில்லை. தொடர்ந்து குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இப்பிரச்னைக்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பராமரிப்பு இல்லாத பூங்காகுழந்தைகள் செல்ல அச்சம்பராமரிப்பு இல்லாத பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர் அடுத்த, நெரூர் காவிரி கரையில் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இங்கு, ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. உடைந்த உபகரணங்களை பயன்படுத்தி, சிறுவர்கள் விளையாடும் போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பெற்றோர் பூங்காவிற்கு குழந்தைகளை அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே, பூங்காவை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை