மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா
05-Oct-2025
மழைநீர் வடிகால் வசதிஏற்படுத்த வேண்டும்கரூர் - ஈரோடு சாலை கோதுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அந்த பகுதிகளில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கிய நிலையில் இருக்கும். டூவீலர்களில் கூட செல்ல முடியாமல், சேறும், சகதியுமாக இருக்கும். அப்போது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பெரும் அவதிப்படுவர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் கோதுார் பகுதியில், வடிகால் வசதிகள் செய்து தரப்படவில்லை. கோதுார் பகுகளில் வடிகால் வசதிகளை செய்து தர, கரூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.குப்பை அகற்ற வேண்டும்பொதுமக்கள் எதிர்பார்ப்புகரூர் ரயில்வே ஸ்டேஷன், பூ மார்க்கெட் பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக அதிகவில் பிளாஸ்டிக் குப்பைகள் இப்பகுதிகளில் தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பூ மார்க்கெட் சாலையில் தேங்கியுள்ள, குப்பையை நாள்தோறும் அகற்ற கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பயணிகள் நிழற்கூடத்தைசீரமைக்க வேண்டுகோள்பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் அருகே புத்தாம்புதுாரில், பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பயணிகள் நிழற்கூடம் சேதம் அடைந்துள்ளது. அதில், பயணிகள் நிற்பது இல்லை. இதனால், பஸ்களை டிரைவர்கள் நிழற்கூடத்தை விட்டு தள்ளி நிறுத்துகின்றனர். இதனால், புத்தாபுதுாரில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், கோடைக்காலம் நெருங்கும் நிலையில், புத்தாம்புதுாரில் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டியது அவசியம்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025