உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வி.ஏ.ஓ., சங்க பொதுக்குழு கூட்டம்

வி.ஏ.ஓ., சங்க பொதுக்குழு கூட்டம்

குளித்தலை : குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் வட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.வட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட இணை செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் விஜேந்திரன், முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர் கரும்பாச்சலம் ஆகியோர், சங்க செயல்பாடுகள் குறித்தும், கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருவதால், அலுவலக பணியில் ஈடுபடும் போது, பாதுகாப்புடன் உரிய நடைமுறைகளை பின்பற்றி உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி பேசினர்.இக்கூட்டத்தில் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில், கிராமங்களை பிரித்தல் தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது.பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை