உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்திய லாரியை விரட்டி சென்று பிடித்த வி.ஏ.ஓ.,

மணல் கடத்திய லாரியை விரட்டி சென்று பிடித்த வி.ஏ.ஓ.,

குளித்தலை : மணல் கடத்திய லாரியை, 1 கி.மீ., துாரம் பைக்கில் விரட்டி சென்று. வி.ஏ.ஓ., பிடித்தார்.குளித்தலை அடுத்த கட்டளை நத்தமேடு காவிரி பகுதியில், திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டு லாரி ஒன்று பைபாஸ் சாலையை நோக்கி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதை கவனித்த அப்பகுதி வி.ஏ.ஓ., ஸ்டாலின் பிரபு தன்னுடைய பைக்கில் வேகமாக விரட்டினார். 1 கி.மீ., துாரம் விரட்டி சென்று லாரியை நிறுத்தினார். உடனே லாரி டிரைவர் சாவியை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பினார்.கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், ஆர்.ஐ., குணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாற்று ஏற்பாடு செய்து லாரியை மாயனுார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து ரெங்கநாதபுரம் வி.ஏ.ஓ., ஸ்டாலின் பிரபு கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி