உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றம்

கரூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றம்

கரூர் :கரூர் சட்டசபை தொகுதியில், எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இதில், வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் முதல், குளத்துப்பாளையம் குகை வழிப்பாதை வரை புறவழிச்சாலை பணி, 2.95 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. சுரூர் மாநகராட்சி திருமாநிலையூர், சாலைபுதுார், செல்லாண்டிபாளையம், சுக்காலியூர் வரை, 4.20 கி.மீ., துாரத்திற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் சாலையை அகலப்படுத்தி, வடிகால் அமைத்து வண்ணகற்கள் பதிக்கும் பணி நிறைவு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது.கரூர் மாநகராட்சியில், 68.40 கோடி ரூபாய் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவாக முடிக்கப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரசு காலனி முதல் நெரூர் வரை சாலை விரிவாக்கப்பணி, 9.41 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டுள்ளது. பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 100 டன் கிடங்கு, 22.50 லட்சம் ரூபாய் கட்டப்பட்டுள்ளது. மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், 1.70 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.கரூர் சட்டசபை தொகுதியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 33 புதிய வகுப்பறைகள், 6.31 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் 2021 முதல் 209.819 கி.மீ., சாலை, 155.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு கட்டடம், 48 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம், 3.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. நெரூர் வடபாகம் பஞ்., பெரியகாளிபாளையம் ஊர்ப்புற நுாலகம் புதிய கட்டடம், 22 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை