உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ. 13.66 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

ரூ. 13.66 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

கரூர், தீபாவளி பண்டிகையையொட்டி, கரூர் உழவர் சந்தையில், 13 லட்சத்து, 66 ஆயிரத்து, 875 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.கரூர் உழவர் சந்தையில் நேற்று முன்தினம் காலை, நேற்று காலை ஆகிய இரண்டு தினங்களில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. தக்காளி கிலோ, 25 ரூபாய், பெல்லாரி வெங்காயம், 26, சின்ன வெங்காயம், 50, வெண்டை, 30, அவரை, 60, புடலைங்காய், 30, பீர்க்கங்காய், 30, முள்ளங்கி, 30, பாகற்காய், 40, முருங்கை, 65, கத்தரிக்காய், 40, பச்சை மிளகாய், 70, கொத்தமல்லி, 80, கேரட், 70, உருளைகிழங்கு, 60 ரூபாய்க்கு விற்றது.நேற்று முன்தினம், 20,700 கிலோ காய்கறிகள், 920 கிலோ பழங்கள் என மொத்தம், 21,820 கிலோ விற்பனை செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 9 லட்சத்து, 57 ஆயிரத்து, 625 ரூபாய். நேற்று, 8,790 காய்கறிகள், 340 கிலோ பழங்கள் என மொத்தம், 9,130 கிலோ விற்பனை செய்யப்பட்டது. இதன் மதிப்பு, 4 லட்சத்து, 9,250 ரூபாய். இரண்டு நாட்களிலும் சேர்ந்து, 30 ஆயிரத்து, 950 கிலோ காய்கள், பழங்கள், 13 லட்சத்து, 66 ஆயிரத்து, 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 196 விவசாயிகள், 5,125 நுகர்வோர் கரூர் உழவர் சந்தைக்கு வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை