உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறைந்த கட்டணத்தில் கார், ஆட்டோ இயக்கம் வாகன உரிமையாளர், டிரைவர்கள் சங்கம் புகார்

குறைந்த கட்டணத்தில் கார், ஆட்டோ இயக்கம் வாகன உரிமையாளர், டிரைவர்கள் சங்கம் புகார்

குளித்தலை, குளித்தலை நகர பகுதியில் வாடகைக்கு இயங்கும் கார், வேன், சரக்கு வாகனம், ஆட்டோ ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தனியார் டாக்ஸி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம், 50க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:குளித்தலை பஸ் ஸ்டாண்ட், பெரியபாலம், ரயில்வே ஸ்டேஷன், பள்ளிவாசல், சுங்க கேட் உட்பட பல்வேறு பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட கார், வேன், சரக்கு வாகனம், ஆட்டோ ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு, குளித்தலையில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று 3 IN 1 TAXI என்ற பெயரில் கார், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களை, குறைந்த கட்டணத்தில் அனைத்தையும் உங்களுக்கு வழங்கப்படும் என சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. எங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலையே நம்பி உள்ளது. எனவே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டாக்ஸி நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை