பராமரிப்பு இன்றி காணப்படும் வெண்ணைமலை அம்மா பூங்கா
கரூர்: வெண்ணைமலையில், 35,000 சதுர அடியில் அம்மா பூங்கா, 2021ல் அமைக்கப்பட்டது. இதில் செயற்கை நீரூற்று, குழந்-தைகள் விளையாட ஊஞ்சல் மற்றும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை, இருக்கை, கழிப்பறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டது. பூங்கா பயன்பாட்டில் இருந்தாலும், போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பராமரிப்பின்றி துருப்பிடித்துள்-ளன. பூங்கா புதர்மண்டி விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறி-யுள்ளது. பூங்காவை பராமரித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.