உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்ணைமலை சேரன் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை

வெண்ணைமலை சேரன் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை

கரூர், பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று, கரூர் வெண்ணைமலை சேரன் பள்ளி சாதனை படைத்துள்ளது.கரூர், வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். மாணவர் கோகுல், 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மாணவர் சுகந்த், 587 மதிப்பெண்களும், மாணவி ஷிபா, 587 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.மாணவி, தனநிதினி, 585 மதிப்பெண்கள், மாணவி சத்யதாரணி, 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.மேலும் 20 மாணவர்கள் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், கணித பாடத்தில், 3 மாணவர்கள், 100க்கு100 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில், 2 மாணவர்கள் 100க்கும்100 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.தமிழ் பாடத்தில் 7 மாணவர்கள், ஆங்கில பாடத்தில் ஒரு மாணவர், இயற்பியல் பாடத்தில் 3 மாணவர்கள், வேதியியல் பாடத்தில் 4 மாணவர்கள், 99 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை புரிந்த மாணவ, மாணவியரை, பள்ளி செயலாளர் பெரியசாமி, தாளாளர் பாண்டியன், முதல்வர் பழனியப்பன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ