உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெண்ணைமலை கோவில் இடப்பிரச்னை; கரூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வெண்ணைமலை கோவில் இடப்பிரச்னை; கரூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அடி-மனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்-தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் ஏராள-மான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்-ளன. இதனை, நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கும், ஹிந்துசமய அறநிலையத் துறையை கண்டிக்கிறோம். கோவில் நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். பிரச்னைக்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் சுப்பிரம-ணியன், மா.கம்யூ., மாவட்ட தலை வர் ஜோதி-பாசு, சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை