மேலும் செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2025
குளித்தலை: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின், 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, குளித்-தலை சுங்ககேட்டில், அக்கட்சியினர் சார்பில், அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர்கள் வடிவேல், முத்து, ராஜு, ஜெயசீலன், மருதுார் நகர செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, கட்சியினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.காவியத்தலைவன் அறக்கட்டளை சார்பில், அன்-னதானம் வழங்கப்பட்டது. மேலும், தே.மு.தி.க.,வின் மாநாடு அழைப்பிதழையும், நகர செயலாளர் விஜயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல், மருதுார் நகர, தே.மு.தி.க., சார்பில் மேட்டும-ருதுார், பணிக்கம்பட்டி, ஆதிநத்தம் ஆகிய கிரா-மங்களில், விஜயகாந்த் உருவ படத்திற்கு நகர செயலாளர் சுரேஷ் தலைமையில், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
06-Dec-2025