சிரமப்படும் கிராம மக்கள்
கிருஷ்ணராயபுரம், வேங்காம்பட்டி கிராமத்தில், வைகோ நகர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்காமல் கிடப்பில் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்பட்டி கிராமத்தில் வைகோ நகர் தெரு உள்ளது.இந்த தெருவில், மழை காலங்களில் மக்கள் நடந்து செல்வதில் சிரமம் இருந்தது. இதையடுத்து சிமென்ட் சாலை அமைக்க கோரி, பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு பல முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் மனு மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் உள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மழை காலம் துவங்குவதற்குள், சிமென்ட் சாலை அமைக்க கிருஷ்ணராயபுரம் யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.