உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.மேட்டூர் அணை நீர்மட்டம், 119 அடியை எட்டியுள்ள நிலையில், காவிரியாற்றில் வினாடிக்கு, 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்-டுள்ளது.மேலும், பவானிசாகர், அமராவதி அணைகள் மற்றும் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீரும், காவிரியாற்றில் கலக்கிறது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 11,386 கனஅடி தண்ணீர் வந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 11,852 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதில், 11,352 கனஅடி தண்ணீர் காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்-டது. மூன்று பாசன வாய்க்காலில், 500 கனஅடி தண்ணீர் திறக்கப்-பட்டது.* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 200 கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 89.28 அடியாக இருந்தது. அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்-தப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கரூர் அருகே உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப் பணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 185 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது.ஆத்துப்பாளையம் அணை க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்-மட்டம், 25.48 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்-காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை