உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கரூர்:கரூர், சின்ன ஆண்டாங்கோவிலில் உள்ள நியூ சக்தி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு, காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பை சீரமைக்காததால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையோரம் ஓடுகிறது. இதனால், வீடுகளுக்கு முறையான குடிநீர் கிடைப்பதில்லை. இங்கு, அழுத்தம் தாங்கும் வகையில் தரமான குழாய் அமைக்கப்படாமல் இருப்பதால், அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி கள், உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ