அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 கன அடியாக குறைப்பு
கரூர்: அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு, 50 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 294 கன அடியாக இருந்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, 300 கன அடி தண்ணீர் வினாடிக்கு, 50 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 83.34 அடியாக இருந்தது. * கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 6,443 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அதில், சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 5,793 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு பாசன வாய்க்காலில், 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.25 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.