உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெல் வயல்களில் களை எடுத்தல் பணி

நெல் வயல்களில் களை எடுத்தல் பணி

கிருஷ்ணராயபுரம்: வீரகுமரான்பட்டி கிராமத்தில், நெல் வயல்களில் விவசாய தொழிலாளர்கள் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரகுமரான்பட்டி கிராமத்தில் விவ-சாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். வயல்களில் தற்-போது களைகள் அதிகம் வளர்ந்து வருவதால், நெற் பயிர்கள் வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, நெற் பயிர்கள் நடுவில் வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணிகளில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். களைகள் அகற்றுவதால், நெற் பயிர்கள் வளர்ச்சி ஏற்பட்டு, கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ