மனைவி மாயம்; கணவன் புகார்
- கரூர், கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் வாங்கரை காலனியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி தீபா, 23; இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த, 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தீபா, இதுவரை வீடு திரும் பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் தீபா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தீபாவின் கணவர் சுப்பிரமணி, 35; போலீசில் புகார் செய்தார்.சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.