மனைவி மாயம்; கணவர் புகார்
குளித்தலை:குளித்தலை அடுத்த, தொண்ட மான் பஞ்சாயத்து, பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 30. இவரது மனைவி கீர்த்தனா, 23. கடந்த 21ம் தேதி மாலை 6:00 மணியளவில் தோகைமலையில் உள்ள மருத்துவமனைக்கு, சென்று வருவதாக கீர்த்தனா கூறி சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவியை காணவில்லை, முத்துசாமி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.