உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த முனையனுார், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 29; பொக்லைன் டிரைவர். இவரது மனைவி நாகேஸ்வரி, 28. இவர், நேற்று முன்தினம், வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு, சுப்பிரமணி கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர். பேத்தி மாயம்கடவூர் தேவர் மலையை சேர்ந்தவர் போதும்பொண்ணு, 60; துப்புரவு பணியாளர். இவரது பேத்தி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மேலுாரை சேர்ந்த குணசேகரன் மகள் தர்ஷினி, 17; திருச்சி தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு, பாட்டி போதும்பொண்ணு வீட்டில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, கல்லுாரிக்கு சென்ற மாணவி தர்ஷினி, மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. போதும்பொண்ணு அளித்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை