முட் செடிகள் அகற்றப்படுமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கிருஷ்ணராயபுபுரம்: வயலுார் கிராமத்தில், விவசாயிகளுக்காக புதியதாக விவசாய களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த களத்தில், விவசாயிகள் அறுவடை செய்யப்படும் சோளம், நெல் மற்றும் சிறு தானிய பயிர்களை வெயிலில் உலர்த்தி பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர் விளை பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் விளை பொருட்கள் உலர்த்தும் களத்தை சுற்றி, அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, களத்தை சுற்றி வளர்ந்து வரும் முள் செடிகளை அகற்ற வேண்டும்.