உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு தொடங்கப்படுமா?

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு தொடங்கப்படுமா?

கரூர் : புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதியதாக அரசு சித்தா மருத்துவ பிரிவு தொடங்கி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், க.பரமத்தி, புன்னம், காசிபாளையம், கார்வழி, விசுவநாதபுரி, தும்பிவாடி ஆகிய, 7 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், இவற்றின் கீழ், 22 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.சின்னதாராபுரம், க.பரமத்தி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, டெங்கு போன்ற காய்ச்சல்களுக்கு நிலவேம்பு கசாயம் பெற நோயாளிகள் வருகை அவ்வப்போது அதிகரித்து மேலும், இயற்கை மருத்துவ பிரிவில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, புன்னத்தில் சித்தா பிரிவு தொடங்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ