உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நன்னியூர் புதுாரில் பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

நன்னியூர் புதுாரில் பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

நன்னியூர் புதுாரில் பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?கரூர், அக். 2-கரூர் மாவட்டம், நன்னியூர் புதுாரில் அரசு தொடக்கப்பள்ளி, கோவில்கள் ஏராளமான குடிருப்புகளும் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், நன்னியூர் புதுார் பிரிவில், பஸ் ஸ்டாப்பில் பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது.அந்த பயணிகள் நிழற்கூடம் முன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தி பயணிகள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரை அழைத்து செல்கின்றன. சில மாதங்களாக பயணிகள் நிழற் கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. நிழற்கூடத்தில், பயணிகள், மாணவ, மாணவியர்கள் நிற்க முடியாமல், வெயில், மழை காலங்களில் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் பஞ்., யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை