உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருவள்ளுவர் மைதானம் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் மைதானம் சீரமைக்கப்படுமா?

கரூர் : கரூர் நகரின் மையப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் விளையாட்டு திடல் சரியான பராமரிப்பின்றி திறந்தவெளிக் கழிப்பிடமாக உள்ளது. இங்குள்ள பார்வையாளர் கேலரி கால்நடைகளின் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் நிலையிலும் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் உள்ளது. அவர்கள் மது குடித்து விட்டு பாட்டில்களை, அங்கேயே வீசி செல்கின்றனர். திடலில் நடக்கும் கண்காட்சியில் நாள்தோறும் சேரும் கழிவு திடல் வளாகத்திலேயே கொட்டப்படுகின்றன. நாள்தோறும் காலை, மாலைகளில் நடைப்பயிற்சிக்கும், வாகனங்கள் ஓட்டப் பயிற்சி எடுக்கவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரும் கூடுகின்றனர். இங்குள்ள அசுத்தத்தை தவிர்க்க முடியாமல், நகர்ப்புறத்தில் வேறு மைதானம் இல்லாததால் சகித்துக் கொண்டு செல்கின்றனர்.விரைவில் இந்தத் திடலில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடக்க உள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக, மைதானத்தில் உள்ள கழிவுகளை அகற்றி, இங்கு பாதுகாப்புக்கு, 24 மணி நேர காவலர்களை நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை