காற்றால் பூக்கள் உதிர்வு, விளைச்சல் பாதிப்பு முருங்கை விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
அரவக்குறிச்சி: பலத்த காற்றுக்கு பூக்கள் உதிர்வு மற்றும் திரட்சியான காய் பிடிக்காமல் விளைந்துள்ளதால், முருங்கை விலை வீழ்ச்சியடைந்-துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகு-தியில் கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை உற்பத்தி செய்யப்படுகிறது. அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வருகி-றது. கடந்த டிச., இறுதியில், முருங்கை காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் கிலோ, 300 ரூபாய்க்கு மேல் விற்பனை-யானது. ஜன., டிச., மாதங்களை தவிர, மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். அதன்படி, மார்ச் மாதம் முதல் முருங்கை சீசன் துவங்கியது. துவக்கத்தில் முருங்கை கிலோ, 100 ரூபாய் வரை விற்பனையா-னது. தற்போது, கரும்பு முருங்கை, ஒரு கிலோ, 14 ரூபாய், செடி முருங்கை, ஒரு கிலோ, 15 ரூபாய், மர முருங்கை, ஒரு கிலோ, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அதிக காற்று வீசுவதால் பூக்கள் உதிர்ந்து, மீதமுள்ள பூக்களும் நன்கு விளையாததால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், முருங்கை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சோகத்துடன் தெரிவித்தனர்.