மேலும் செய்திகள்
தீக்காயமுற்ற பெண் சாவு தீ வைக்கப்பட்டாரா
09-Jun-2025
பவானி, அம்மாபேட்டை அருகே மாணிக்கம்பாளையம், சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி, 35; இவரது கணவர், 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பழனிசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் பழனிசாமி மனைவி விஜயாவுக்கும், கலைவாணிக்கும் அடிக்கடி சண்டை நடந்தது. கலைவாணி, கூலிகாரன்பாளையத்தில் வேலைக்கு செல்வதற்காக, எக்ஸல் மொபட்டில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த விஜயா, கணவருடனான பழக்கத்தை விட மாட்டாயா? என்று கேட்டு கண்டித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால், கலைவாணியில் இரண்டு கைகளிலும் வெட்டியுள்ளார். அப்பகுதி மக்கள் மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அம்மாபேட்டை போலீசார், விஜயாவை தேடி வருகின்றனர்.
09-Jun-2025