பைக் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பலி
பைக் மீது சரக்கு வாகனம்மோதி தொழிலாளி பலிகுளித்தலை, டிச. 26-தண்ணீர்பள்ளியில், பைக் மீது ஈச்சர் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக் கோட்டையை சேர்ந்தவர் முருகேசன் மகன் மணிகண்டன், 26. இவர், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை கொத்தனார் வேலைக்காக, வீட்டிலிருந்து கரூர் நோக்கி பைக்கில் வந்துள்ளார். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த ஈச்சர் சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். அவரது உடலை கைப்பற்றி, குளித்தலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் விபத்து நடக்காத வகையில், தடுப்பு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.