உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட சமூக நல அலுவலக காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர் மாவட்ட சமூக நல அலுவலக காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர், ஜூலைமாவட்ட சமூக நலஅலுவலக, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் பாலின நிபுணர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:'கரூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுபாட்டின் கீழ் செயல்படும், மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள பாலின நிபுணர், தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் (மிஷன் சத்தி திட்டம்) ஆகிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், https://karur.nic.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். வரும், 30 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கரூர் கலெக்டர் வளாகத்தில் செயல்படும், மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை