உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரேஷன் கடை பணியிட நேர்முகத்தேர்வு இன்று முதல் அனுமதி சீட்டு பெறலாம்

ரேஷன் கடை பணியிட நேர்முகத்தேர்வு இன்று முதல் அனுமதி சீட்டு பெறலாம்

கரூர், நவ. 19-கரூர் மாவட்டத்தில், ரேஷன் கடை காலி பணியிட நேர்முகத்தேர்வுக்கு, அனுமதி சீட்டு இன்று (19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில், 57 விற்பனையாளர்கள், ஆறு கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதை நேரடி நியமனம் மூலம் நியமிக்க, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில், தகுதியானவர்களுக்கு வரும் டிச., 2 முதல், 8 வரை, கரூர் அரசு கலைக்கல்லுாரியில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.இதற்கான அனுமதி சீட்டு இன்று (19) முதல் https://drbkarur.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 04324-296545 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை