உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் கைது

குளித்தலை, கத்தியை காட்டி மிரட்டி, பெண்ணிடம் தாலிக்கொடி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குளித்தலை அடுத்த வதியம் பஞ்., கீழ குறப்பாளையத்தை சேர்ந்தவர் வக்கீல் சங்கர், 37. இவரது மனைவி முருகவள்ளி என்ற பவித்ரா, 35. இவர் நேற்று காலை, 11:15 மணியளவில் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டில் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்தார்.பவித்ரா தடுத்ததில் கைவிரலில் ரத்த காயம் ஏற்பட்டது. பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டதும், தப்பி ஓடிய வாலிபரை அருகில் இருந்த பொதுமக்கள் பிடித்து, குளித்தலை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம், ஆயகவுண்டர் பாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் நவீன் சுந்தர், 31, என தெரிய வந்தது.சுந்தர் நேற்று முன்தினம் இரவு, தனக்கு சொந்தமான பல்சர் பைக்கில் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு, பின்னர் நேற்று காலை ஊருக்கு செல்லும்போது, தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி தாலிக்கொடி பறித்தது தெரியவந்தது. பவித்ரா கணவர் வக்கீல் சங்கர் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட நவீன் சுந்தரை கைது செய்து, குளித்தலை குற்றவியல் நடுவர் எண் 2ல் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை