உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, வேலன்செட்டியூர் பகு-தியை சேர்ந்தவர் நீலமேகம் மகன் முனியப்பன், 21; இவர், ஆண்-டிபட்டிக்கோட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்-தினம் மாலை, ஓட்டலில் முனியப்பன் வேலை செய்து கொண்டி-ருந்தார். அப்போது கடையின் பெயர் பலகையில் முனியப்பன் கை வைத்தபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்-பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை