உணவு டெலிவரிக்கு ஜாரோஸ் செயலி அறிமுகம்
கரூர்: கரூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், உணவு சப்ளைக்காக புதிய செயலி அறிமுக விழா, தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. அதில், 'ஜாரோஸ்' என்ற புதிய செயலியை, கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழக தலைவர் ராஜூ வெளியிட்டார். பின், கரூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்பசாமி கூறியதாவது:ஓட்டலில் இருந்து சப்ளை செய்யப்படும் பொருட்கள், அதே விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். 15 கிலோ துாரத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, விரைவாக உணவு பொருட்கள் சப்ளை செய்ய, 50 பேர் இன்று முதல் (நேற்று) பணி-யாற்ற உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் செந்தில்-குமார், வர்த்தகம் மற்றும் தொழில் கழக மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், ஜாரோஸ் செயலி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பல்வேறு வர்த்தக சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்