உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாணவர் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசுவதாக புகார்: நடவடிக்கை கோரி மறியல் போராட்டம்

மாணவர் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசுவதாக புகார்: நடவடிக்கை கோரி மறியல் போராட்டம்

மாணவர் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசுவதாக புகார்: நடவடிக்கை கோரி மறியல் போராட்டம்அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பறையப்பட்டி புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 69 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உள்பட, ஆறு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி அருகில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பள்ளி வளாகத்தில் உள்ள குழாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் சாப்பிட்டு விட்டு கைகழுவிய தண்ணீர், குடத்தில் விழுந்துள்ளது. குடிக்கும் தண்ணீரில் ஏன் இப்படி செய்தாய் எனக் கேட்டு, அப்பெண் மாணவனின் இடது கன்னத்தில் தாக்கியுள்ளார்.தகவலறிந்த மாணவனின் தந்தை, 'எதற்கு என் மகனை அடித்தாய்' என, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு மாணவனை தாக்கிய பெண் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதியை குறிப்பிட்டு பேசி வரும் தலைமையாசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி மாணவனின் பெற்றோர் மற்றும் வி.சி., கட்சியினர் அரூர்-பொம்மிடி சாலையில், பறையப்பட்டி புதுார் பள்ளி முன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், அரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னமாது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 11:30 மணிக்கு கலைந்து சென்றனர். இதனிடையே தலைமையாசிரியர் தமிழ்செல்வி, அறிவியல் ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோரை, மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை