உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் அருகே முதியவர் இருவர் கொலைதுப்பு கிடைக்காமல் தவிக்கும் போலீசார்

ஓசூர் அருகே முதியவர் இருவர் கொலைதுப்பு கிடைக்காமல் தவிக்கும் போலீசார்

ஓசூர் அருகே முதியவர் இருவர் கொலைதுப்பு கிடைக்காமல் தவிக்கும் போலீசார்ஓசூர்:ஓசூர் அருகே, முதியவர் இருவர் கொலை சம்பவத்தில், சரியான துப்பு கிடைக்காமல் போலீசார் தவிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் வசித்து வந்த லுார்துசாமி, 70, மற்றும் அவரது மனைவியின் தங்கையான எலிசபெத், 60, ஆகியோர் கடந்த, 12 மாலை வீட்டில் இருந்த போது, மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த இரு மெத்தைகளுக்கு தீ வைத்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது. இதில் லுார்துசாமி மற்றும் எலிசபெத் ஆகியோரது சடலங்களில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. கொலையான எலிசபெத் அணிந்திருந்த நகைகள் மற்றும் லுார்துசாமி பாக்கெட்டில் இருந்த, 2,650 ரூபாய், பீரோவில் இருந்த, 10 பவுன் நகை, 8,000 ரூபாய் ஆகியவை அப்படியே உள்ளதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.ஆனால், எலிசபெத் அணிந்திருந்த நகைகளை, மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. எந்த காரணத்திற்காக முதியவர்கள் கொலை செய்யப்பட்டனர் என, போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை. எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் தவிக்கின்றனர். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவின்படி, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒன்னல்வாடி பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களில் சந்தேகத்திற்கு இடமாக வந்து சென்றவர்கள் யார் என, போலீசார் பார்த்து வருகின்றனர். அதேபோல், மொபைல் போன் டவர் மூலமாக, சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வீட்டை சுற்றியிருந்த மொபைல் எண்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ