உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காதலன் வீட்டிற்கு சென்ற காதலிஇரு கிராமத்தினர் இடையே மோதல்

காதலன் வீட்டிற்கு சென்ற காதலிஇரு கிராமத்தினர் இடையே மோதல்

காதலன் வீட்டிற்கு சென்ற காதலிஇரு கிராமத்தினர் இடையே மோதல்போச்சம்பள்ளி, :கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்தூர், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமல் மகள் ஐஸ்வர்யா, 20. அகரம் பகுதியைச் சேர்ந்த சுகனேஸ்வரன், 21, என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதை அறிந்த பெற்றோர், ஐஸ்வர்யாவிற்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முயற்சித்தனர். இதை அறிந்த ஐஸ்வர்யா நேற்று முன்தினம் மாலை, அகரத்தில் உள்ள காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இதை அறிந்த ஐஸ்வர்யாவின் அப்பா விமல், உடனடியாக தன் உறவினர்கள், 20க்கும் மேற்பட்டோருடன் அகரம் கிராமத்திற்கு சென்று, சுகனேஸ்வரன் என நினைத்து அவரது வீடு அருகே இருந்த விஷ்வா என்பவரை தாக்கினர். பின்னர் சுதாரித்த விமல் மற்றும் அவரின் உறவினர்கள், விஷ்வாவை விட்டு விட்டு, அருகில் இருந்த சுகனேஸ்வரனை தாக்கினர். இதை அறிந்த அப்பகுதி மக்கள் தாக்கியவர்களை, திரும்ப தாக்கினர். இதனால் அப்பகுதி கலவர பூமியாக மாறியது. பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், நாகரசம்பட்டி எஸ்.ஐ., சிவகுமார், சங்கீதா உள்ளிட்ட போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை நேரில் ஆய்வு செய்த நிலையில், இரு கிராமத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை