உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக் திருடிய லாரி டிரைவர் கைது

பைக் திருடிய லாரி டிரைவர் கைது

பைக் திருடிய லாரி டிரைவர் கைதுகிருஷ்ணகிரி, :ஊத்தங்கரை அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார். 40, கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 17ல், ஸ்பிளண்டர் பைக்கில் திருவண்ணாமலை சாலையில் சென்றுள்ளார். காலை, 8:30 மணியளவில் சென்னப்பநாய்க்கனுாரிலுள்ள ஒரு ஓட்டல் முன் பைக்கை நிறுத்திவிட்டு, சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நபர், செல்வகுமாரின் பைக்கை திருட முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து, ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பைக் திருட முயன்றவர் தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தேர்வீதியை சேர்ந்த லாரி டிரைவர் சென்னப்பன், 42, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை