உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின் கசிவால் கூரை வீட்டில் தீ: நெல், பணம் நாசம்

மின் கசிவால் கூரை வீட்டில் தீ: நெல், பணம் நாசம்

மின் கசிவால் கூரை வீட்டில் தீ: நெல், பணம் நாசம்போச்சம்பள்ளி:மத்துார் அடுத்த, அந்தேரிப்பட்டி பஞ்., கொட்டபள்ளனுாரை சேர்ந்தவர் தேவராஜ், 45. இவர், அதே பகுதியிலுள்ள தன் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை தேவராஜ், மனைவி சினேகலதா, 40, மற்றும் 13, 11 வயது குழந்தைகளுடன் தன் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மின்கசிவால் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள், கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதில், வீட்டில் இருந்த 15 மூட்டை நெல், 5 மூட்டை நிலக்கடலை, 2 லட்சம் ரூபாய் மற்றும் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட நில ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாயின. மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை