கிருஷ்ணகிரிக்கு இன்று அமைச்சர் கயல்விழி வருகை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரிக்கு இன்று, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி-யினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வருகை தர உள்ளார்.இது குறித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஆதிதி-ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று (செப்.2) காலை, 9:30 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ, மாணவியரின் விடுதிகளை ஆய்வு செய்ய உள்ளார். அவரை வரவேற்க, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் மூத்த முன்னோடிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்ட-மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்-பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செய-லாளர்கள் அனைவரும் காலை, 9:00 மணிக்கு, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறமுள்ள அரசு பயணியர் மாளிகைக்கு வருகை தர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்-துள்ளார்.