உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாலகுறி கிராமத்தில் மஹாபாரத திருவிழா

பாலகுறி கிராமத்தில் மஹாபாரத திருவிழா

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில், மஹாபாரத திருவிழா கடந்த, 15ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மஹாபாரத சொற்பொழிவும், தெருக்கூத்து நாடகமும் நடந்து வருகிறது. இதில், கிருஷ்ணன் பிறப்பு நாடகம், அம்பாள் திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், வில் வளைப்பு, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், காண்டவன தகனம், துயில், சித்திரசேனன் சண்டை, அரவாண் சாபம் ஆகிய நாடகங்கள் நடந்து வந்தன. நேற்று அர்ச்சுணன் தபசு நாடகம் நடந்தது. மாலை, திரவுபதியம்மன் வீதி உலா எடுத்துச் சென்று, கங்கையில் நீராடுதல், சிறப்பு பூஜைகளும் செய்தனர். இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ