கொத்தனாரை கொல்ல முயற்சிதேய்காய் வியாபாரி கைது
கொத்தனாரை கொல்ல முயற்சிதேய்காய் வியாபாரி கைதுஓசூர்,:சூளகிரி அருகே, கொத்தனாரை வெட்டிக்கொல்ல முயன்ற தேங்காய் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மாரண்டப்பள்ளியை சேர்ந்த கொத்தனார் சக்தி, 47. இவரும், ஆருப்பள்ளி அருகே முத்தப்பன் கொட்டாயை சேர்ந்த தேங்காய் வியாபாரி கிருஷ்ணன், 33, என்பவரும் உறவினர்கள். கடந்த, 6ல் கிருஷ்ணன் தன் டாடா ஏஸ் வாகனத்தை, உறவினர் வெங்கடாசலம் வீட்டில் நிறுத்தினார். நேற்று முன்தினம் தன் வாகனத்தை திரும்ப எடுக்க சென்றபோது, 4 சக்கரங்களும் அகற்றப்பட்டிருந்தன. கடனாக வாங்கிய, ஒரு லட்சம் ரூபாயை, கிருஷ்ணன் திரும்ப கொடுக்காததால், வாகனத்தின் சக்கரங்களை வெங்கடாசலம் கழற்றியது தெரிந்தது. ஆத்திரமடைந்த கிருஷ்ணன், வெங்கடாசலத்தின் ஸ்கூட்டரை எடுத்து சென்றார். இதையறிந்த சக்தி, கிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார். ஆருப்பள்ளி முனீஸ்வரன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அரிவாளால் கிருஷ்ணன் வெட்டியதில், வயிறு, தலை, தோள்பட்டையில் சக்திக்கு படுகாயம் ஏற்பட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சக்தி மனைவி ஷாலி, 36, புகார் படி, சூளகிரி போலீசார், கிருஷ்ணனை கைது செய்தனர்.