உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தார்ச்சாலைகளாக மாற்றித்தர ஓசூர் மாநகர கமிஷனர் உறுதி

தார்ச்சாலைகளாக மாற்றித்தர ஓசூர் மாநகர கமிஷனர் உறுதி

தார்ச்சாலைகளாக மாற்றித்தர ஓசூர் மாநகர கமிஷனர் உறுதிஓசூர்,:ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டில் நுாலகம், பூங்கா, விளையாட்டு திடல், நகர்புற நலவாழ்வு மையம், தார்ச்சாலை வசதி, வரி வசூல் மையம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர, 15 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, அந்த வார்டு, தி.மு.க., கவுன்சிலரும், பொதுசுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன், கமிஷனர் ஸ்ரீகாந்திடம் மனு கொடுத்தார்.அதையேற்று நேற்று காலை, முனீஸ்வர் நகர், பூஞ்சோலை நகர், கிருஷ்ணப்பா தோட்டம், முனீஸ்வர் நகர் விரிவாக்கம், தேஜாஸ் நகர் ஆகிய பகுதிகளில் கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார். அப்போது, முனீஸ்வர் நகரில் நகர்புற நலவாழ்வு மையம், வரி வசூல் மையம் அமைப்பதற்கான இடத்தையும், நியூ தேஜாஸ் நகரில் நுாலகம் அமைப்பதற்கான இடத்தையும், பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரனுடன் ஆய்வு செய்தார். முனீஸ்வர் நகரிலுள்ள, மண் சாலைகள், தார்ச்சாலைகளாக மாற்றப்படும் என கமிஷனர் உறுதியளித்தார். முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை