மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம்
07-Mar-2025
கல்லுாரி மாணவி, தனியார் நிறுவனஊழியர் உள்பட மூவர் மாயம்கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தை சேர்ந்தவர் தனலட்சுமி, 19. பர்கூர், அங்கிநாயக்கனப்பள்ளி அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி., கணினி பிரிவு மூன்றாமாண்டு மாணவி. கடந்த, 2 இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர். * கிருஷ்ணகிரி அடுத்த செம்படமுத்துாரை சேர்ந்தவர் பொன்னி, 19. கடந்த, 2 மதியம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதில், பழையபேட்டையை சேர்ந்த பெயின்டர் சக்திவேல், 22, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.* கிருஷ்ணகிரி அடுத்த கங்கோஜிகொத்துாரை சேர்ந்தவர் முத்தமிழரசன், 22. சாமல்பள்ளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 29ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரது பெற்றோர் அளித்த புகார்படி, குருபரப்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.
07-Mar-2025