உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரைவர் கொலையில்மச்சான் மீது போலீசார் சந்தேகம்

டிரைவர் கொலையில்மச்சான் மீது போலீசார் சந்தேகம்

டிரைவர் கொலையில்மச்சான் மீது போலீசார் சந்தேகம்ஓசூர், :ஓசூர், தேர்ப்பேட்டையை சேர்ந்த சிவக்குமார், 32. பிக்கப் வாகன டிரைவர்; அதே பகுதியை சேர்ந்தவர் நவீன், 30. இவரது தங்கை நந்தினி, 28. இவரை, சிவக்குமார் திருமணம் செய்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், சிவக்குமாரை வீட்டின் அருகே ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதில், சிவக்குமாரின் மச்சான் நவீன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரும் வீட்டில் இல்லாமல் மாயமாகி உள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது.பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், சிவக்குமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் பிரச்னையா என, போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை. மேலும், மச்சான் நவீனை, சிவக்குமார் தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் சிவக்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்ற கோணத்தில், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை பார்வையிட்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ