உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பணி நிரந்தரம், பாதுகாப்புகவுரவ விரிவுரையாளர்கள் மனு

பணி நிரந்தரம், பாதுகாப்புகவுரவ விரிவுரையாளர்கள் மனு

பணி நிரந்தரம், பாதுகாப்புகவுரவ விரிவுரையாளர்கள் மனுஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 20 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் நேற்று கல்லுாரி நிர்வாகத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:யு.ஜி.சி., பரிந்துரை செய்த, 57,700 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்பு நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை