போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில்முள்ளங்கி அறுவடை மும்முரம்
போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில்முள்ளங்கி அறுவடை மும்முரம்போச்சம்பள்ளி, :கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், பூசாரிக்கொட்டாய், ஜம்புகுட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முள்ளங்கி சாகுபடிக்கு விவசாயிகள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது, முள்ளங்கி அறுவடை பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் முள்ளங்கியை கிலோ, 12 முதல், 15 ரூபாய் வரை விலைக்கு வாங்குவதால், முள்ளங்கி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதேபோல், வியாபாரிகள் விலைக்கு வாங்கிய முள்ளங்கியை, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று கிலோ, 20 முதல், 24 ரூபாய் வரை மொத்த விற்பனை செய்கின்றனர்.