உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குளித்தலை அருகே பாதயாத்திரை விழா

குளித்தலை அருகே பாதயாத்திரை விழா

குளித்தலை அருகே பாதயாத்திரை விழா குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., ஆதனுாரில் சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக, 14ம் ஆண்டு பாதயாத்திரை விழா நடைபெற்றது.முன்னதாக ஆதனுார் செல்வ விநாயகர், வரதராஜ பெருமாள் கோவில், பெரியசாமி, அங்காளபரமேஸ்வரி, கருப்பசாமி, காளியம்மன், முருகன் மற்றும் ஆதிநத்தம் கொளக்காரன் முத்தையா ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் சக்தி பூஜையின் போது சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாரியம்மன் குடிபுகுந்தது. இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள், சமயபுரம் மாரியம்மன் பஜனை பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.பின், செல்வவிநாயகர், காளியம்மன் கோவிலில் இருந்து மின் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் ரதத்துடன், கோவிலில் இருந்து பாதயாத்திரை குழு புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை