தி.மு.க., சார்பில் நீர் மோர்பந்தல் திறப்பு விழா
தி.மு.க., சார்பில் நீர் மோர்பந்தல் திறப்பு விழாஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி, சிங்காரப்பேட்டையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் ரஜினி செல்வம். மத்திய ஒன்றிய செயலர் எக்கூர் செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில விவசாய அணி நிர்வாகி டேம் வெங்கடேசன், மாணவரணி குப்புராஜ் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.