ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம்500 போலீசார், 150 சிசிடிவி கண்காணிப்பு
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம்500 போலீசார், 150 'சிசிடிவி' கண்காணிப்புஓசூர்:ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா துவங்கி நடந்து வருகிறது. நாளை தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், மாநகர மேயர் சத்யா தலைமையில், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கமிஷனர் (பொறுப்பு) மாரிச்செல்வி, மாநகர நல அலுவலர் அஜிதா, செயற்பொறியாளர் விக்டர் ஆகியோர் தேரோட்ட வீதியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, திறந்தநிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பக்தர்கள் தவறி விழாமல் தடுக்க தற்காலிகமாக தடுப்பு அமைப்பது, பக்தர்களுக்கு குடிநீர், தெருவிளக்குகள், நடமாடும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க, மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.தேரோட்ட வீதிகள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்பதால், குப்பையை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். பக்தர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏதாவது ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளிக்க, மாநகராட்சி ஏற்பாடுகள் செய்துள்ளது. தேரோட்டத்திற்கு உள்ளூர் மக்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், பாதுகாப்பை உறுதி செய்ய, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 150க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.