உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்ட கலைவிழா மாநாடு

மாவட்ட கலைவிழா மாநாடு

மாவட்ட கலைவிழா மாநாடுபோச்சம்பள்ளி :கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கம் சார்பில், மாவட்ட கலைவிழா மாநாடு நேற்று நடந்தது. இதில், நாடக தந்தை சங்கரதாஸின், 120ம் ஆண்டு ஆராதனை விழா நடத்தப்பட்டது. மத்துார், திருப்பத்துார் சாலையில் உள்ள சிவன் கோவிலிருந்து, நாட்டுபுற கலையான தெருக்கூத்து கலைஞர்களின் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், காவடி ஆட்டம், குச்சிபுடி நடனத்துடன், மத்துாரிலுள்ள தனியார் திருமணத்திற்கு பேரணியாக சென்றனர். இதில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களின் மாநில தலைவர் சத்தியராஜ், ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம், மாவட்ட தலைவர் ராமநாதன் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராமிய கலைக்குழுவினர், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை