அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்கிருஷ்ணகிரி:பர்கூர் டவுன் பஞ்.,களில் கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நேற்று நடந்தது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தங்கமுத்து தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்து, அ.தி.மு.க., ஆட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கிடைத்த திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பர்கூர் பகுதியிலுள்ள கடைகள், பொதுமக்களுக்கு வழங்கினார்.